பேலியோ பீட்சா மிக்சட் – யசோ குணா

தேவையான பொருட்கள்

பீர்க்கங்காய் துண்டுகள் 100 கி

பன்னீர். 50 கி

முட்டைகள். 6

மிளகுதூள். தேவைக்கு

தயிர். 2 ஸ்பூன்

உப்பு & வெண்ணெய்

அரைக்க

இஞ்சி. 1 துண்டு

பூண்டு. 4 பல்

தக்காளி. 1

காஷ்மீர் மிளகாய். 10

இவற்றை மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.

14695587_899820023486681_27234885208338156_n

செய்முறை :

வாணலியில் வெண்ணெய் சேர்த்து , அரைத்த கலவையை கொட்டி வதக்கவும்

பின்னர் துண்டுகள் போட்ட பனீரை சேர்த்து பிரட்டவும்

நிறம் மாறியதும் காயை சேர்த்து உப்பு மற்றும் தயிர் சேர்த்து பிரட்டவும்

பாதி வெந்த நிலையில் முட்டைகளை உடைத்து ஊற்றவும் மஞ்சள் கருவை உடைத்து விட்டால் போதும்.மிளகுதூள் தூவி தீயை குறைத்து மூடிவைக்கவும்.

10 நிமிடம் கழித்து மல்லி இழை தூவி தட்டிற்கு மாற்றவும்.

திருப்பி போட வேண்டாம்.

20 நிமிடங்கள் , 50 ரூபாய் செலவு , அற்புதமான டின்னர் இருவருக்கு ரெடி..

இதை செய்து சாப்பிட்டு எப்படி இருக்குனு சொல்லலைனா , வயறு வலிக்கும்..

சமையல் குறிப்பு:

https://www.facebook.com/100003760758227

Follow us on Social Media