பேலியோ மட்டன் குழம்பு & மட்டன் வறுவல் – தேன்மொழி அழகேசன்

தேவையான பொருட்கள்#
மட்டன் 1/2 கிலோ
சின்ன வெங்காயம் 10
தக்காளி 1
இஞ்சி பூண்டு விழுது 1 மேக
பேலியோ மசாலா 2 மேக(பொருத்தப்பட்ட பதிவு.. pinned post)
தேங்காய் பால் 1 டம்ளர்
தாளிக்க சுத்து கொழுப்பு கடுகு சோம்பு கருவேப்பிலை தேங்காய் (சிறிதாக அரிந்தது) பட்டை 1கிராம்பு 2 இலை 1
உப்பு தேவையான அளவு
செய்முறை#
மட்டனை நன்றாக கழுவிய பின தேவையான உப்பு சேர்த்து் குக்கரில் 3 விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும். வணக்கிய வெங்காயம் தக்காளியை மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.அரைத்த கலவை,வேக வைத்த மட்டனை ஒரு பாத்திரத்தில் ஊற்றவும்.தேவையான உப்பு,மசாலா , இஞ்சி பூண்டு விழுது போட்டு கொதிக்க வைக்கவும்.நன்றாக பச்சை வாசம் போகும் வரை கொதிக்க விட வேண்டும்.தேவையான நீர் சேர்த்து கொள்ளவும்.மிதமான தீயில் வைத்து வேக விடவும்.இறக்கும் முன் தேங்காய் பால் ஊற்றவும்.அடுப்பை அணைக்கவும்.வடச்சட்டியில் சுத்து கொழுப்பு போட்டு நன்றாக உருகியதும் கடுகு சோம்பு பொரிந்ததும் கறிவேப்பிலை பட்டை கிராம்பு இலை போடவும் .3 சின்ன வெங்காயம் நீள வாக்கில் அரிந்தது போட்டு நன்றாக வதக்கியதும் அரிந்த தேங்காய் போடவும்.கலவையை குழம்பில் ஊற்றவும்.குழம்பை சூப்பு மாதிரி குடித்து விட்டு கறியை சாப்பிடுங்கள்.
மட்டன் வறுவல்#
தேவையான பொருட்கள்:
மட்டன் 1/2 கிலோ
பேலியோ மசாலா 1 மேக
இஞ்சி பூண்டு விழுது 2 மேக
சீரகம் மிளகு தூள் 1 மேக
தக்காளி 1
பெரிய வெங்காயம் 1 உப்பு தேவையான அளவு
தாளிக்க கடுகு சோம்பு கருவேப்பிலை சுத்து கொழுப்பு
செய்முறை#
மட்டனை நன்றாக கழுவிய பின் தேவையான உப்பு சேர்த்து 3 விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும்.வடச்சட்டியில் சுத்து கொழுப்பு எண்ணெய் ஊற்றி கடுகு சோம்பு பொரிந்ததும் கறிவேப்பிலை , அரிந்த வெங்காயம் தக்காளி தேவையான உப்பு சேர்த்து வணக்கவும்.வேக வைத்த மட்டனை போடுங்க,மட்டன் வேக வைத்த சூப்பே போதும்.நீர் விட வேண்டாங்க.மசாலா,இஞ்சி பூண்டு விழுது போட்டு சுருள வணக்கவும்.சீரகம் மிளகு தூள் போடுங்க,கொத்தமல்லி புதினா தூவி அலங்கரிக்கவும்.சுவையான மட்டன் வறுவல் ரெடி.
செய்ய தேவையான நேரம் 40 நிமிடம்(20+20)

சமையல் குறிப்பு :

Follow us on Social Media