பேலியோ மீன் சூப் – Rtn கண்ணன் அழகிரிசாமி

தேவையானவை :

மீன் (எந்தவகை வேண்டுமானாலும்) அல்லது மீன் மண்டை : கால் கிலோ
பெரிய வெங்காயம் : 1
தக்காளி : 1
பச்சை மிளகாய் : 2
மிளகு தூள் : இரண்டு தேக்கரண்டி
சீரக தூள் : ஒரு தேக்கரண்டி
மல்லி தூள் : ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் : அரை தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது : ஒரு தேக்கரண்டி
தேங்காய் பால் : ஒரு கப்
உப்பு தேவைக்கு :

தேங்காய் எண்ணை : ஒரு தேக்கரண்டி
நெய் : ஒரு தேக்கரண்டி
கடுகு : கால் தேக்கரண்டி
பூண்டு : 10 பல் (நசுக்கி வைத்து கொள்ளவும் )
சின்ன வெங்காயம் : 10 இரண்டாக நறுக்கி வைத்து கொள்ளவும் .
கறிவேப்பிலை : சிறிதளவு

செய்முறை :

ஒரு கடாயில் எண்ணை ஊற்றி, கடுகு & கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய பெரிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது & நறுக்கிய தக்காளி ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

பின் சுத்தம் செய்த மீன் அல்லது மீன் மண்டை போட்டு வதக்கவும். தண்ணீர் சேர்த்து மல்லி தூள் , மஞ்சள் தூள் & உப்பு சேர்த்து வேக விடவும். வெந்தவுடன் மிளகு தூள் & சீராக தூள் சேர்த்து கலக்கி இறக்கவும்.

வேறு ஒரு கடையில் நெய் ஊற்றி, பச்சை மிளகாய் , நறுக்கிய சின்ன வெங்காயம், நசுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும். இந்த கலவையை தயார் செய்து வைத்துள்ள சூப்பில் சேர்த்து பரிமாறவும் .

சுவையான பேலியோ மீன் சூப் தயார் !

சமையல் குறிப்பு :

Follow us on Social Media