பேலியோ முட்டைக் கறி புரோட்டா – ராதிகா ஆனந்தன்

ஒரு வாணலியில் தே.எண்ணெய் சிறிது சேர்த்து அதில் ஒரு சின்ன பட்டை, ஒரு கிராம்பு, ஒரு ஏலக்காய், ஒரு ஸ்பூன் சோம்பு, மிளகு, 1 தக்காளி சேர்த்து வதக்கி மைப்போல அரைத்துக் கொள்ளவும்.
ஏதேனும் கறியை (அல்லது காளான்) 200 கி, இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் பொடி, உப்பு, அரைத்தக் கலவை சேர்த்து குக்கரில் அளவான தண்ணீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். தண்ணீர் இல்லாமல் வற்ற வைத்து அதில் 3 ஸ்பூன் கொத்தமல்லி இலை, 6 ஸ்பூன் புதினா இவ்விரண்டையும் சேர்த்து அரைத்தக் கலவையை சேர்த்து கிளறி விட்டு வைத்துக் கொள்ளவும்.
100 கி காளிப்பிளவரை உப்புக் கலந்த வெந்நீரில் 10 நிமிடம் முக்கி வைத்துப் பின் தண்ணீர் இல்லாமல் மிக்ஸியில் ஒரு சுத்து சுத்தி எடுத்துக் கொள்ளவும்.
இன்னொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் துருவி வைத்த காளிப்பிளவரை உப்பு சிறிது போட்டு வதக்கி அதில் கறிக் கலவையை சேர்த்து ஒன்றாகும் வரை வதக்கி , பொடியாக நறுக்கிய 1 பெரிய வெங்காயத்தைப் போட்டு , அரை எலுமிச்சைப் பழச்சாறு கலந்து மிளகுத்தூள் , கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

சமையல் குறிப்பு:

Follow us on Social Media