பேலியோ மூலிகை சூப் – Rtn கண்ணன் அழகிரிசாமி

தேவையானவை :

வெங்காயத்தாள் : 10
துளசி இலை : 10
கற்பூரவல்லி இலை : 5
பால் : அரை கப்
தேங்காய் பால் : அரை கப்
பேலியோ காய்கறி (நறுக்கியது) : அரை கப்
உப்பு : தேவைக்கு
மிளகு தூள் : ஒரு தேக்கரண்டி
வெண்ணெய் : 2 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை : சிறிதளவு

செய்முறை :

ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி வெண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயத்தாள், துளசி இலை, கற்பூரவல்லி இலை, பேலியோ காய்கறி ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக வதக்கி , ஆறியவுடன் நன்றாக அரைத்து வைத்து கொள்ளவும்.

ஒரு கடாயில் பால் சிறிது தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் அரைத்த விழுது & உப்பு சேர்த்து ஒரு கொதி விடவும்.

பின் தேங்காய்ப் பால் சேர்த்து அடுப்பை அணைத்து விட்டு மிளகு தூள் & வெண்ணெய் சேர்த்து , கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும் .

மழைக்கு ஏற்ற பேலியோ மூலிகை சூப் தயார் !

சமையல் குறிப்பு :

Follow us on Social Media