பேலியோ மோமோஸ் , கார்லிக் ரெட் சாஸ் – ராதிகா ஆனந்தன்

சிக்கன்/ மட்டன்/ பீஃப்/ போர்க்/ மீன் – 500 கி. (கீமாவாக எடுத்து வேக வைத்துக் கொள்ளவும், மீனாக இருந்தால் ஆவியில் வேக வைத்து உதிர்த்துக் கொள்ளவும்)

அல்லது

பேலியோ காய்கறிகள் ( குடைமிளகாய், காளிபிளவர், கேரட், புடலங்காய் கலவையாக துருவி வதக்கியது )300கி + 200 கி பன்னீர் துருவியது.

15073527_1230279567039930_8802948697999349871_n

கறி மோமோஸ் செய்ய வேக வைத்த கீமாவை
மிக்ஸியில் ஒரே ஒரு சுத்து சுத்தினால், கெட்டி மாவு பதத்திற்கு வரும். அதில் இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மஞ்சள் தூள், சீரகத்தூள் ஒரு சிட்டிகை, பெரிய வெங்காயம் 2 பொடியாக நறுக்கியது,ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது , ஒரு முட்டை எல்லாம் சேர்த்து கலந்து உருண்டையாக பிடித்து மறுபடியும் ஆவியில் 15 – 20 நிமிடம் வேகவைத்துக் கொள்ளவும்.


சாஸ்:
குக்கரில் ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு முழுத் தக்காளி, 4 மிளகாய் வற்றல் சேர்த்து ஒரு விசில் வைக்கவும். ஒரு வாணலியில் வெண்ணெய் , 5 பூண்டு பொடியாக நறுக்கியது சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அரைத்த விழுது , சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு ஆப்பிள் சிடர் வினிகர் ஒரு ஸ்பூன் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும்..

சமையல் குறிப்பு:

Follow us on Social Media