ப்ரோக்கலி வதக்கல் – ஆசியா உமர்

தே.பொ:-
ப்ரோக்கலி – 300 கிராம்
ஆலிவ் அல்லது தேங்காய் எண்ணெய் அல்லது பட்டர் அல்லது நெய் – 2 டீஸ்பூன் (உங்கள் விருப்பம்)
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1
பொடியாக நறுக்கிய பூண்டு பற்கள் – 6
மஞ்சள், மிளகு, சீரகத்தூள்(சேர்த்து திரித்தது) – 1 -2 டீஸ்பூன் (சுவைக்கு)
உப்பு – தேவைக்கு.

செய்முறை:-

ப்ரோக்கலியை சிறிய பூக்களாக நறுக்கி கொதி நீரில் போட்டு வடி கட்டவும்.

ஒரு வாணலியில் பட்டர் விட்டு சூடானவுடன் நறுக்கிய வெங்காயம், , பூண்டு சேர்த்து வதக்கவும். அத்துடன் ப்ரோக்கலியைச் சேர்க்கவும்.சிறிது உப்பு சேர்த்து மூடி போட்டு வதங்க விடவும். நன்றாக வேக விடவும்.

நன்கு வதங்கியதும் மிளகு சீரகத்தூள் சேர்த்து நன்கு பிரட்டவும்.

ப்ரோக்கலி வதக்கல் தயார். தட்டில் சூடாகப் பரிமாறவும்.

குறிப்பு:-
இதைப் போல் காளிப்ளவரிலும் செய்யலாம். முட்டை விரும்பினால் 2 முட்டை அடித்துச் சேர்த்து பிரட்டியும் பரிமாறலாம்.நான் இதில் முட்டை சேர்க்கவில்லை.

சமையல் குறிப்பு:

Follow us on Social Media