மசாலா அடைத்த கத்திரிக்காய் – தேன்மொழி அழகேசன்

தேவையான பொருட்கள்#
அடைப்புக்கு(stuffing):
இஞ்சி 2 இஞ்ச்
பூண்டு 6 பல்
மஞ்சள் தூள் 1 தேக
எலுமிச்சை சாறு சிறிதளவு
மிளகாய்தூள் 1/2 தேக
கறிமசாலா 1 தேக
கறிவேப்பிலை சிறிதளவு
உப்பு தேவையான அளவு
நெய்யில் சிறிது வணக்கி மிக்சியில் போட்டு கெட்டியா அரைத்து கொள்ளவும்.
மசாலாக்கு#
தக்காளி 1
வெங்காயம் 1
பூண்டு 5 பல் சிறியதாக அரிந்தது
கறிமசாலா தூள் 1 மேக
தாளிக்க கடுகு சோம்பு கறிவேப்பிலை நெய் பெருங்காயம் சிறிதளவு

செய் முறை#
1 கத்திரிக்காயை முழுதாக 4 ஆக அரிந்து கொள்ளவும்.
2 அரைத்த கலவையை கத்திரிக்காயுனுல் திணிக்கவும்.தனியாக வைக்கவும்.
3 வடச்சட்டியில் நெய் ஊற்றி கடுகு சோம்பு வெடித்ததும் கறிவேப்பிலை அரிந்த வெங்காயம் தக்காளி பூண்டு போட்டு எண்ணெய் பிரிந்துவரும்வரை வதக்கவும்.
மசாலா தேவையான அளவு உப்புசேர்க்கவும்
4.அடைத்த கத்திரிக்காயை போடவும்.குறைந்த வெப்பத்தில் வைத்து மூடி போட்டு வேக வைக்கவும்.
5 சிறிது சிறிது நேரம் கழித்தி மெதுவாக திருப்பவும்.காயுக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.
6 நெய் மற்றும் மூடி போட்டு வேக வைக்கும் போது வரும் நீரிலே காய் நன்றாக வெந்து விடும்
புளிப்பு காரம் உங்க தேவைக்கு ஏற்ப சேர்த்து கொள்ளவும்.
செய்ய தேவையான நேரம் 40 நிமிடம்
அவன் உள்ளவங்க கத்திரிக்காய் அடைப்பை 4 நிமிடம் வைத்தும் பயன்படுத்தலாம்.

சமையல் குறிப்பு :

Follow us on Social Media