மசாலா அடைத்த காளான் – தேன்மொழி அழகேசன்

1 .மசாலா#
காளான்
(காளானில் நடுவில் உள்ள தண்டை எடுத்து அதனை சிறிதாக அரிந்து கொள்ளவும்)
கேரட் 1/2 (சிறிதாக அரிந்தது)
இஞ்சி பூண்டு விழுது 1/2 தேக
வெங்காயம் தக்காளி விழுது 1தேக
மிளகாய்தூள் சிறிதளவு
உப்பு தேவையான அளவு
கொத்தமல்லி
செய் முறை#
வடச்சட்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காளான் தண்டு(சிறிதாக அரிந்தது) கேரட் போட்டு நன்றாக வதக்கியதும் இஞ்சி பூண்டு விழுது வெங்காயம் தக்காளி விழுது மிளகாய்தூள் கொத்தமல்லி உப்பு போட்டு நன்றாக வதக்கவும்.கெட்டி பதத்தில் வதக்கிவைத்துக் கொள்ளவும்.
2 . காளானை வெண்ணெய் உப்பு மிளகாய் தூள் சேர்த்து சிறிது நேரம் ஊற வைக்கவும்.
3 .ஊற வைத்த காளானில் மசாலா வைத்து மிதமான சூட்டில் தோசைக்கல்லில்வேக வைக்கவும்.இடையிடையே நெய் தடவி திருப்பவும்.காளான் சிறிது நேரத்திலேயே வெந்து விடும்.சுவை சூப்பரோ சூப்பர்.பானிபூரி(மன்னிச்சு) மாதிரி அப்படியே வாயில் போட்டு சுவைக்கவும்
தைராய்டு உள்ளவங்க காளானை தவிர்க்கவும்.
என்னிடம் சீஸ் இன்று இல்லை மேலே கோட்டிங்கு வைத்தால் மசாலா வெளியேவராது.
இதை சிறிது பத்திரமாக திருப்பி விட்டேன்.வெளியே சிறிது வந்ததையும் உள்ளே வைத்து விட்டேன்.
செய்ய தேவையான நேரம் 20 நிமிடம்
அவனிலும் வைக்கலாம்.

சமையல் குறிப்பு :

https://www.facebook.com/100003711296557

Follow us on Social Media