மசாலா சிக்கன் – தேன்மொழி அழகேசன்

தேவையான பொருட்கள்#
சிக்கன் 1/2 கிலோ
பெரிய வெங்காயம் 1
தக்காளி 1
இஞ்சி பூண்டு விழுது 2 மே.க.
காஷ்மீர் மிளகாய் தூள் 1 மே.க.
பேலியோ மசாலா 1 தேக
உப்பு தேவையான அளவு
தாளிக்க கடுகு சோம்பு கருவேப்பிலை தேங்காய் எண்ணெய்,மிளகாய் வத்தல் 2
செய் முறை#
வடச்சட்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு சோம்பு போடுங்க,கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை,நறுக்கிய வெங்காயம் தக்காளி,வர மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்.வெங்காயம் தக்காளி நன்றாக வதக்கியதும் இஞ்சி பூண்டு விழுது மிளகாய்தூள்,மசாலா , உப்பு தேவையான அளவு போடவும்.பின் சிக்கனை போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.நீர் வற்றும் வரை சுருள வதக்கினால் சுவையான மசாலா சிக்கன் ரெடி.
செய்ய தேவையான நேரம் 20 நிமிடம்
2 பேலியோ பரிமாரலாம்.

சமையல் குறிப்பு :

Follow us on Social Media