மசாலா தூள் – தேன்மொழி அழகேசன்

தேவையான பொருட்கள்
1.மிளகாய் வத்தல் 3/4 கிலோ

(குண்டு மிளகாய் காரம் அதிகம்.
நீள மிளகாய் காரம் கம்மி அரைத்தால் தூள் அதிகம் கிடைக்கும்.
காஷ்மீி்ரி மிளகாய் தூள் நிறம் தூக்கலாகவும் காரம் கம்மி.(குழந்தைகளும் கலரா இருந்தா பிடுக்காததையும் விரும்பி உண்பர்.காரம் தேவைப்படுவோர் 1 கிலோ,குறைவா வேண்டும் என்றால் 1/2 கிலோ.)
2 .மல்லி அல்லது தனியா 1 கிலோ
3 . விரலி மஞ்சள் 100 கிராம்
4 . சீரகம் 400 கிராம்(அதிகம் சேர்க்க ருசி அதிகம் விலையும் அதிகம்)
5 .மிளகு 100 கிராம்
6 . சோம்பு 100 கிராம்
7 . கசகசா 100 கிராம்
8.வெந்தயம் 50 கிராம்
9 . கடுகு 50 கிராம்
10.பட்டை 10 கிராம்
11 .அன்னாச்சி பூ10 கிராம்
12 கிராம்பு 10 கிராம்
13 கறிவேப்பிலை சிறிதளவு
14 பெருங்காயம் 50 கிராம்(கட்டி பெருங்காயம்)
செய் முறை#
வத்தலை நன்றாக காய வைத்து எடுத்துக் கொள்ளவும்.
கெட்டியான வடச்சட்டியில் எண்ணெய் இல்லாமல் வறுக்கவும்.
கறுக்கக் கூடாது.லேசானா வெப்பத்தில் வைத்து வறுக்கவும்.
சீரகம் வெந்தயம் கடுகு நன்றாக பொரியனும்.மற்றதை கருக்காமல் வணக்கவும்.
கறிவேப்பிலை காய வைத்து எடுத்துக் கொள்ளவும்.
இந்த அளவு 4 பேர் உள்ள குடும்பத்திற்கு 6 மாதம் வரை வரும்.மெசினில் குடுத்து அரைத்து ஆற வைத்து பெரிய பாத்திரத்தில் கரண்டி போட்டு வைத்து கொள்ளவும்.தேவைப்படும் போது ஈரம் படாமல் எடுக்கவும்.அப்போதான் வண்டு வராது.பெருங்காயம் வத்தல் கறிவேப்பிலை வறுக்க வேண்டாம்.
ஒவ்வொரு ஊருக்கும் நபருக்கும் வேறுபடும்.இதை கூட்டியோ குறைத்தோ அரைத்துக் கொள்ளவும்.
எல்லா வகை குழம்பிற்கும் பொருந்தும்.ம மட்டன்,சிக்கன் மீன் சைவ குழம்பு வறுவல் சாம்பார் புளிக்குழம்பு கூட்டு . வேலைக்கு செல்பவர்களுக்கு ரொம்ப எளிது.
எ.கா.
1. மட்டன் குழம்பு வறுவல்:
இந்த மசாலாவுடன் வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு சேர்த்தால் போதும்

சமையல் குறிப்பு :

https://www.facebook.com/100003711296557

Follow us on Social Media