மஞ்சள் பூசணிக்காய் சூப் – டாலி பாலா

சமையல் குறிப்பு: டாலி பாலா

மஞ்சள் பூசணிக்காய் அரை கிலோ சன்னமாக வெட்டிக் கொள்ளவும்
வெங்காயம் ஒன்று சன்னமாக வெட்டவும்
பூண்டு 4 பல்

இவற்றை முதலில் ஒரு மேசை கரண்டி தேங்காய் எண்ணையில் நன்றாக வதக்கி வைக்கவும்,,,ஏதேனும் ஸ்டாக் சேர்த்து (சிக்கன் or வெஜ்) வேக வைக்கவும்,.நான் பன்னீர் செய்து எடுத்த whey நீரில் வேக வைத்தேன்
நன்றாக வெந்தவுடன் அதை blender ல் அரைத்து சிறிது டைம் ஹெர்ப் (Thyme) சேர்த்து மீண்டும் ஒரு கொதி வரும் வரை அடுப்பில் வைத்து எடுத்து அதில் 3 ஸ்பூண் க்ரீம், சிறிது பட்டர், ஒரு கப் ப்ரேஷ் தேங்காய் பால்,தேவையான அளவு உப்பு மிளகு தூள் சேர்த்து சூடாக பருகவும்,.தேங்காய் பால் இல்லாவிட்டால் சாதாரண மாட்டுப் பால் சேர்க்கலாம்

Follow us on Social Media