மட்டன் ஈரல் வறுவல் – தேன்மொழி அழகேசன்

தேவையான பொருட்கள்#
மட்டன் 1/4 கிலோ
ஈரல் 150 கிராம்
சின்ன வெங்காயம் 4
சின்ன பூண்டு 10 பல்
இஞ்சி 1 இன்ச்
மிளகு 2 மேக
சீரகம் 1 மேக
கறிவேப்பிலை
தேங்காய் எண்ணெய்
கடுகு சோம்பு
கொத்தமல்லி புதினா சிறிதளவு
மஞ்சள் தூள் 1தேக
உப்பு தேவையான அளவு

15085586_919066148227086_5433433577502477610_n
செய் முறை#
1.மட்டனை குக்கரில் தேவையான உப்பு சேர்த்து 3 விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும்
2.வடச்சட்டியில் தேங்காய் எண்ணெய் அல்லது சுத்து கொழுப்பு எண்ணெய் ஊற்றி கடுகு சோம்பு வெடித்ததும் கறிவேப்பிலை போடுங்க
3.மேலே கொடுத்துள்ள வற்றை மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்(கொத்தமல்லி புதினா தவிர)
4.அரைத்த விழுதை போட்டு நன்றாக பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்
5.சிறிதாக அரிந்த ஈரலை போடுங்க,ஈரலுக்கு தேவையான உப்பு சேருங்க
6. வேக வைத்த மட்டனை போடுங்க மட்டன் வேக வைத்த சூப்பே போதும் . தண்ணீர் தேவையில்லைங்க
7. நீர் வற்றும் வரை சுருள வதக்கினால் சுவையான மட்டன் ஈரல் வறுவல் ரெடி.
இறக்கும் போது கொத்தமல்லி புதினா தூவி பரிமாரவும்.காரம் அதிகம் விருப்பபட்டா கூடுதலாக மிளகு தூள் போட்டு கொள்ளவும்.

15181315_919066214893746_2128177353296852221_n
பி.கு.
ஈரலை அதிகம் வேக வைத்தால் ரப்பர் மாதிரி ஆகிவிடும்.
செய்ய தேவையான நேரம் 30 நிமிடம்
விடுமுறை நாட்களில் வாழைஇலையில் தான் உணவு.இலைவாசனையோடு உண்ணும்போது ஆகா அருமை..

சமையல் குறிப்பு :

Follow us on Social Media