மட்டன் கோலா உருண்டை – பிருந்தா ஆனந்த்

#தேவையான பொருட்கள்::

மட்டன் கொத்து கறி -1/4கி
சின்ன வெங்காயம் – 1
இஞ்சி பூண்டு பேஸ்டு – 2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4
தேங்காய் துருவியது -1கப்
சோம்பு தூள் – 1ஸ்பூன்
மிளகு ,சீரக பொடி – 1ஸ்பூன்
மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
புதினா – 1 கைபிடி
கொத்த மல்லி இலை – 1 கைபிடி
பட்டை – 2
கிராம்பு – 4

#செய்முறை::

*மட்டன் கொத்து கறியை உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ள வேண்டும் ஆறியவுடன் மிக்சியில் நீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளவும்.
*அரைத்த மட்டனுடன் இஞ்சி பூண்டு விழுது ,மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,மல்லி தூள் ,சோம்பு தூள்,மிளகு சீரக தூள் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்
*எண்ணெயில் பட்டை, கிராம்பு,வெங்காயம், தேங்காய்,காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து புதினாவுடன் நீர் இல்லாமல் அரைத்து கறி கலவையில் சேர்க்கவும்.
*சிறிதாக நறுக்கிய வெங்காயம் ,கொத்த மல்லி இலை, கலவையில் சேர்த்து கலந்து சிறு உருண்டையாக உருட்டிக் கொள்ளவும்.
*வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி உருண்டைகளை மிதமான தீயில் வறுத்து எடுக்கவும்.

*சுவையான மட்டன் கோலாஉருண்டை தயார்.

{குறிப்பு:: மயொனஸ் சாஸ்,சில்லி சாஸ்,தக்காளி சாசுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்}

சமையல் குறிப்பு :

Follow us on Social Media