மட்டன் கோலா குழம்பு – ஹெமலதா

தேவையான பொருட்கள்:
மட்டன் கொடுத்து கறி 1 /2 kg ,பிரிஞ்சி இலை , கிராம்பு 1 , ஏலம் 1 , பட்டை, சோம்பு 1sp, சீரகம் 1sp. பெப்பர் 10, எண்ணெய், இஞ்சி பூண்டு பேஸ்ட். வத்தல் பொடி 2sp, மல்லி பொடி4sp, முந்திரி 10 , வெங்காயம், தக்காளி கறிவேப்பிலை, தேங்காய் , பட்டர்..

செய்முறை: கறி உப்பு இலை, கிராம்பு ஏலம் பட்டை சோம்பு சீரகம் பெப்பர் சேர்த்து 2 விசில் விட்டு இறக்கவும் ..( விசில் வைக்காமலேயே வெந்து விடும் னு சொல்ல்வாங்க.. எனக்கு பயம் so 2 விசில் வைப்பேன் .. ) வெந்ததும் வடி கட்டிக்கொள்ளவும். இந்த நீரை குழம்பு வைக்க use பண்ணிக்கலாம்… கறியுடன் வெங்காயம் இஞ்சி பூண்டு பேஸ்ட், கரம் மசாலா சிறிது, வத்தல் பொடி, முந்திரி தேங்காய் துருவியது அனைத்தையும் சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளவும்.. சிறிய உருண்டையாக உருட்டி கொள்ளவும். 2 உருண்டை மட்டும் தனியாக வைத்து மாற்றத்தை பட்டர் இல் பொரித்து எடுக்கவும்

அதே பொறித்த எண்ணையில் சிறிது எடுத்து சோம்பு தாளித்து வெங்காயம் தக்காளி வதக்கி இஞ்சி பூண்டு பேஸ்ட், கரம் மசாலா மல்லி தூள் மிளகாய் தூள் மஞ்சள் தூள் வதக்கி உப்பு சேர்த்து கொதிக்க விடவும். வடி கட்டிய நீரை சேர்த்து கொள்ளவும் .. தேங்காய் 3 பல் அரைத்து சேர்க்கவும் …. எடுத்து வைத்து இருக்கும் 2 கோல உருண்டையை கரைத்து குழம்பில் சேர்க்கவும்… மல்லி இலை தூவி இறக்கவும்… சாப்பிடும் போது 5 நிமிடம் முன் கோலாவை குழம்பில் போடவும்… முதலிலேயே போட்டால் வூறிவிடும்.. இதே போல் boneless chicken வைத்தும் செய்யலாம்… ஆனால் ஆட்டு கறி இல் தான் டேஸ்ட் சுவையாக இருக்கும்….

சமையல் குறிப்பு :

Follow us on Social Media