மட்டன் சாப்ஸ் – சுஜாதா வெங்கடேசன் சேலம்

தேவையான பொருட்கள்

மட்டன் – 250 கிராம்
தேங்காய் – 1 மே.க.
முந்திரி – 3
தனியா – 1 தே.க.
சோம்பு – 1 தே.க.
கசகசா – 1 தே.க.
மிளகு – 1 தே.க.
பட்டை – 1
கிராம்பு – 4
இஞ்சி – 1″
பூண்டு – 10
வரமிளகாய் – 2
சின்ன வெங்காயம் – 3+10
தக்காளி – 1
எண்ணை – 2 மே.க.
கடுகு – 1 தே.க.
கறிவேப்பிலை
உப்பு – தேவையான அளவு

செய்முறை
1. தேங்காய் முதல் சின்ன வெங்காயம் 3 வரை உள்ள பொருட்களை அரைக்கவும்.
2. மட்டனை குக்கரில் 6 விசில் விட்டு வேக வைக்கவும்.
3. இரும்பு கடாயில் எண்ணை ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு 10 வெங்காயம், தக்காளி, மட்டன், உப்பு, அரைத்த மசாலா ஊற்றி கெட்டியானதும் இறக்கவும்.

 சமையல் குறிப்பு: 

Follow us on Social Media