மட்டன் நெய் ரோஸ்ட் – திருப்பூர் கணேஷ்

தேவையான பொருட்கள்:

1. மட்டன் – 1 கிலோ
2. நெய் – 8 மேசைக்கரண்டி
3 . இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 மேசைக்கரண்டி

4. காஷ்மீரி மிளகாய் – 10 (நல்ல மணம் & நிறம் கொடுக்கும், காரம் அதிகம் இருக்காது )
5. வரமிளகாய் – 5 அ 6
6. வரமல்லி – 1 மேசைக்கரண்டி
7. மிளகு – 1 மேசைக்கரண்டி
8. சீரகம் – 2 தேக்கரண்டி
9. சோம்பு – 1 தேக்கரண்டி
10. பட்டை – 2 இன்ச்
11. கிராம்பு – 4
12. அன்னாச்சி மொக்கு – 1
13. இஞ்சி – 1-1/2 இன்ச்
14. பூண்டு – 5 பல்
15. எலுமிச்சைச்சாறு – 1 மேசைக்கரண்டி

16. தயிர் – 2 மேசைக்கரண்டி
17. கறிவேப்பிலை – 2 கொத்து
18. மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன்
19. உப்பு – தேவையான அளவு

4 முதல் 12 வரை உள்ள பொருட்களை கடாயில் மிதமான அடுப்பில் தனித்தனியாக வறுத்து மிக்சி ஜாரில் போட்டு 13, 14 மற்றும் 15ஐ சேர்த்து தண்ணீர் விட்டு நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

செய்முறை:

முதலில் கறியில் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கலக்கி 5 நிமிடம் ஊறவைத்து பின் தண்ணீரில் 2 முறை கழுவி வைக்கவும்.

குக்கரில் நெய் 3 மேசைக்கரண்டி விட்டு இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கிவிட்டு மஞ்சள்தூள் சேர்த்து பின் கறியை கொட்டி உப்பு போட்டு கறி தண்ணீர் விட்டு வரும் வரை வதக்கவும் பின் 1/2 அ 3/4 டம்ளர் தண்ணீர் ஊற்றி கலக்கிவிட்டு மிதமான அடுப்பில் 5 முதல் 7 விசில் விட்டு இறக்கிவைக்கவும். விசில் அடங்கியவுடன் மட்டன் தனியாகவும் மட்டன் தண்ணியை தனியாகவும் பிரித்து எடுத்துவைக்கவும்.

ஒரு கடாயில் நெய் 5 மேசைக்கரண்டி(1/4 கப்) விட்டு காய்ந்ததும் அரைத்துவைத்த மசாலா மற்றும் தயிர் சேர்த்து கலக்கிவிட்டு 5 நிமிடம் கழித்து மட்டன் தண்ணீரை ஊற்றி மசாலா கலர் நிறம் டார்க் ஆக மாறும் வரையும் தண்ணீர் சுண்டும் வரையும் ஓட்டிவிடவும். அடிபிடிக்காம ஓட்டிக்கிட்டே இருக்கனும் (10 to 15 நிமிடம் ஆகும்). நெய்யில் மசாலா பிரிந்து தனித்தனியாக வரும் அந்த பதம் வந்தவுடன் வேகவைத்த மட்டனை சேர்த்து கலக்கி விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து 10 நிமிடம் நல்லா பிரட்டி விடவும். ட்ரை பதம் வந்த பின் கறிவேப்பிலை தூவி இறக்கவும்.

ஹிம்ம்ம்ம் இப்போ மசாலா மணக்க மணக்க அதி அற்புதச் சுவையான “மட்டன் நெய் ரோஸ்ட்” கொழுப்பில் மிதக்க மிதக்க சுவைக்கத் தயார்… ??
அட இன்னும் எதுக்கு வெய்ட் பண்ணுரீங்க சீக்கிரம் போங்க செஞ்சு பாத்துட்டு எப்படி இருந்துச்சுன்னு சீக்கிரமா சொல்லுங்க …. 🙂

சமையல் குறிப்பு :

Follow us on Social Media