மட்டன் பொடிமாஸ் – Rtn கண்ணன் அழகிரிசாமி

தேவையானவை :

மட்டன் : கால் கிலோ (கொத்தியது அல்லது மிகச் சிறியதாக நறுக்கியது)
வெங்காயம் : 1
பூண்டு : 10 பல்
தேங்காய் துருவல் : ஒரு கப்
தேங்காய் பவுடர் : அரை கப்
சோம்பு : 1 தேக்கரண்டி
கசகசா : 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் : 3
மிளகாய் தூள் : 1 தேக்கரண்டி
மல்லி தூள் : கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் : அரை தேக்கரண்டி
இந்துப்பு : தேவைக்கு
தேங்காய் எண்ணெய் : 4 தேக்கரண்டி
பட்டை : 2 இன்ச் துண்டு
கிராம்பு : 6
கறிவேப்பிலை : சிறிதளவு
சின்ன வெங்காயம் : 10 (இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்)
எலுமிச்சை சாறு : அரை தேக்கரண்டி
கொத்தமல்லி இலை : சிறிதளவு

செய்முறை :

மட்டனை நன்கு கழுவிவிட்டு குக்கரில் சிறிதளவு மட்டும் தண்ணீர் சேர்த்து மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்.

கடாயை சூடாக்கி எண்ணெய் ஊற்றி அதில் சோம்பு போட்டு சிவந்ததும் அத்துடன் கசகசா சேர்த்து லேசாக வதக்கி, மிக்ஸியில் போட்டு பொடி பண்ணி வைக்கவும்

வேக வைத்த மட்டனில் (தண்ணீரை தனியாக எடுத்து விட்டு) தேங்காய் பவுடர் , அரைத்த பொடி, மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும்.

அந்த கலவையில் வெந்த மட்டனிலிருந்து எடுத்த தண்ணீர் தெளித்து ஒன்றாக பிசையவும்

வாணலியை சூடாக்கி எண்ணெய் காய்ந்ததும் பட்டை, கிராம்பு வெடித்ததும் வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் , கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

அதில் மட்டன் கலவை & தேங்காய் துருவல் சேர்த்து நன்கு வதக்கி சிவந்து முறுவலாகும் வரை வைத்து இறக்கவும்.

தனியாக ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம் பொரித்து சேர்க்கவும். அத்துடன் எலுமிச்சை சாறு சேர்த்து பிரட்டி, கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.

சுவையான மட்டன் பொடிமாஸ் தயார்.

சமையல் குறிப்பு :

Follow us on Social Media