மட்டன் வெள்ளை குழம்பு & நெய் வறுவல் – தேன்மொழி அழகேசன்

1 . மட்டன் வெள்ளை குழம்பு#
தேவையான பொருட்கள்
மட்டன் 1/2 கிலோ
சோம்பு கசகச 1 தேக
தேங்காய் 1/2 மூடி
சின்ன வெங்காயம் 10
இஞ்சி பூண்டு விழுது 1மேக
பச்சமிளகாய் 2
வர மிளகாய் 2
பட்டை 1சிறியது
கிராம்பு 2
பிரியாணி இலை
உப்பு தேவையான அளவு
செய்முறை#
குக்கரில் நெய் ஊற்றி நன்றாக கழுவிய மட்டன் இஞ்சி பூண்டு விழுது உப்பு சேர்த்து 3விசில் வைத்து எடுத்துக் கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி கடுகு சோம்பு கறிவேப்பிலை 1 பட்டை பச்சமிளகாய் வர மிளகாய் 2 கிராம்பு பிரியாணி இலை சிறியது , அரைத்த வெங்காயம் தேங்காய் விழுது அல்லது தேங்காய் பால் சேர்த்து கொள்ளவும்.வேக வைத்த மட்டனை சேர்த்து மிதமான சூட்டில் வேக வைக்கவும்.குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
குழம்பை சூப்பாக குடித்து விட்டு கறியை சாப்பிடுங்கள்.
செய்ய தேவையான நேரம் 35 நிமிடம்
2 . மட்டன் நெய் வறுவல்#
தேவையான பொருட்கள்
மட்டன் 1/2 கிலோ
வெங்காயம் 1
தக்காளி 1 அல்லது எலுமிச்சை சாறு சிறிதளவு
காஷ்மீர் மிளகாய் தூள் 2 மேக
இஞ்சி பூண்டு விழுது 2 மேக
உப்பு தேவையான அளவு
தாளிக்க கடுகு சோம்பு கறிவேப்பிலை நெய்
செய் முறை
வடச்சட்டியில் தேவையான நெய் ஊற்றி கடுகு சோம்பு வெடித்ததும் கறிவேப்பிலை அரிந்த வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு விழுது மிளகாய்தூள் உப்பு போட்டு நன்றாக வதக்கியதும் 3 விசில் வைத்து வேக வைத்த மட்டனை சேர்க்கவும்.மட்டன் வேக வைத்த சூப்பே போதும் . மிதமான சூட்டில் எண்ணெய் பிரிந்துவரும்வரை நன்றாக சுருள வதக்கினால் சுவையான நெய் மட்டன் வறுவல் ரெடி
செய்ய தேவையான நேரம் 30 நிமிடம்

சமையல் குறிப்பு :

Follow us on Social Media