மணத்தக்காளி கீரை பணியாரம் & துவையல் – தேன்மொழி அழகேசன்

1 .பணியாரம்:
கீரையை நன்றாக கழுவி சிறிதாக அரிந்தது
வெண்ணெய்யில் நன்றாக உப்பு சேர்த்து வதக்கி மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த கீரை+ மஞ்சள் தூள்+ சின்ன வெங்காயம்+ சீரகம்+ மிளகாய் தூள்+ உப்பு தேவையான அளவு+3 முட்டை..நன்றாக கலந்து பணியாரக்கல்லில் மிதமான சூட்டில் சிறிது நெய் ஊற்றி கலவையை ஊற்றவும்.சிறிது நேரம் கழித்தி மெதுவாக திருப்பி எடுத்தால் சுவையான மணத்தக்காளி கீரை பணியாரம் ரெடி.3 முட்டை+1 கப் கீரை ஒரு நேர உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
குழந்தைகளும் விரும்பி உண்பர்.

2. துவையல்#
கீரை+ பூண்டு+ சின்ன வெங்காயம்+ வரமிளகாய்+உப்பு+ புளிப்பு சுவைக்கு சிறிதளவு எலுமிச்சை சாறு… நன்றாக வெண்ணெய் வதக்கி மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

3 பொரியல்#
கீரை+ சின்ன வெங்காயம்+ சீரகம்+ பெருங்காயம் வரமிளகாய்+ கடுகு+ கறிவேப்பிலை + நெய் + முட்டை 2… வழக்கமாக பொரியல் செய்யும் முறை . கடைசியாக உடைத்த முட்டைகளை ஊற்றவும்…

சமையல் குறிப்பு :

Follow us on Social Media