மதுரை அயிரை மீன் குழம்பு- Rtn கண்ணன் அழகிரிசாமி

அயிரை மீன் உயிருடன் கிடைக்கும், அவற்றை ஒரு சட்டியில் தேங்காய் பாலில் அல்லது பாலில் மூழ்கும் படி போட்டு அரை மணி நேரம் வைத்தால், அவை விழுங்கிய மண் துகள்களை துப்பி விடும் , பிறகு எடுத்து தண்ணீரில் நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்

தேவையான பொருட்கள்:

அயிரை மீன் : அரை கிலோ
சின்ன வெங்காயம் : 250 கிராம்
தக்காளி : 2
பூண்டு : 10 பற்கள்
மிளகாய் தூள் : 2 தேக்கரண்டி
மல்லித் தூள் : 3 தேக்கரண்டி
கடுகு : அரை தேக்கரண்டி
சீரகம் : அரை தேக்கரண்டி
வெந்தயம் : கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை : சிறிது
புளி : சிறிய எலுமிச்சை அளவு ( ஊற வைக்கவும் )
உப்பு : தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் : தேவையான அளவு
கொத்தமல்லி : சிறிது

அரைத்து வைக்க :

துருவிய தேங்காய் : 3 தேக்கரண்டி மிளகாய் வற்றல் : 4

செய்முறை:

ஒரு மண் சட்டியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை, பூண்டு, வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின் அதில் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து நன்கு மென்மையாக வதக்க வேண்டும்.

பின்பு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து வதக்கி, பின் புளிச்சாற்றினை ஊற்றி, பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட வேண்டும்.

அதில் அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்த்து, உப்பு சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்க விட்டு, பின் அதில் அயிரை மீனை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவி இறக்கவும் .

மதுரை அயிரை மீன் குழம்பு ரெடி!

சமையல் குறிப்பு :

Follow us on Social Media