மதுரை மட்டன் சுக்கா – திருப்பூர் கணேஷ்

பேலியோ – அசைவம்

தேவையான பொருட்கள்:

1. மட்டன் – 1/4 கிலோ + 100 கிராம் கொழுப்பு

2. நெய் – 3 ஸ்பூன்
3. சீரகம் – 1/2 ஸ்பூன்
4. பச்சைமிளகாய் – 2
5. வரமிளகாய் – 2 சிறியது
6. சின்ன வெங்காயம் – 100 கிராம்
7. கறிவேப்பிலை – 2 கொத்து
8. பூண்டு – 4 பல் (தட்டி வைக்கவும்)
9. மிளகுத்தூள் – 1 மேசைக்கரண்டி

10. இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 மேசைக்கரண்டி ( https://www.facebook.com/…/tam…/permalink/1850598078560462/… )
11. மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
12. மல்லித்தூள் – 1 தேக்கரண்டி
13. கரம்மசாலா – 1/2 ஸ்பூன் ( https://www.facebook.com/photo.php?fbid=10207460467372266&set=gm.1846051562348447&type=3 )
14. சீரகத்தூள் – 1/2 ஸ்பூன்
15. மஞ்சள்தூள் – 1 ஸ்பூன்
16. கறிவேப்பிலை – 1 கொத்து
17. தக்காளி – 1

18. இந்துப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் குக்கரில் கறியை போட்டு உப்பு, மஞ்சள்தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், கறிவேப்பிலை 1 கொத்து, மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம்மசாலா தூள், சீரகத்தூள், தக்காளி சேர்த்து 3/4 டம்ளர் தண்ணி ஊற்றி கலக்கிவிட்டு 6 to 7 விசில் விட்டு இறக்கிவைக்கவும்.

வாணலியில் நெய்விட்டு சீரகம், பச்சைமிளகாய், வரமிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை 1கொத்து, தட்டிய பூண்டு இவைகளை ஒன்றன்பின் ஒன்றாக போட்டு வதக்கி பின் குக்கரில் உள்ள கறியை நீருடன் கொட்டி ஓட்டிவிட்டு தே.அளவு உப்பு சேர்த்து மூடி போட்டு 10 நிமிடம் வேகவிடவும். கறி வெந்தபின் மிளகுத்தூள் தூவி 3 நிமிடம் ஒட்டி விட்டு நல்லா ட்ரை ஆன பின் கறிவேப்பிலை 1கொத்தை சிறிதாக கிள்ளி போட்டு இறக்கிவைக்கவும்.

இப்போ மதுரை மல்லிகைப்பூ மாதிரி மிருதுவாக கம கமன்னு “மதுரை மட்டன் சுக்கா” சாப்பிட தயார்.

வாழ்க கொழுப்புடன்! வாழ்க வளமுடன்!

சமையல் குறிப்பு :

Follow us on Social Media