மத்திமீன் குழம்பு – தேன்மொழி அழகேசன்

தேவையான பொருட்கள்#
மத்திமீன் 1/2 கிலோ
கொடம்புளி 1 எலுமிச்சை அளவு
சின்ன வெங்காயம் 10
சீரகம் 1 மே.க.
தனியா தூள் 1 மே .க.
மஞ்சள் தூள் 1/2 மே.க.
மிளகாய்தூள் 1 மே.க.
உப்பு தேவையான அளவு


தாளிக்க கடுகு கருவேப்பிலை,வெந்தயம்,தேங்காய் எண்ணெய்,5 சின்ன வெங்காயம்,5 பல் பூண்டு,மிளகாய் வத்தல் 3


செய் முறை#


1.புளியை நன்கு ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும்.
2. கரைத்த புளியை ஒரு பாத்திரத்தில் ஊற்றவும்.
3 . சின்ன வெங்காயம்,சீரகம் இரண்டையும் மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
4 . அரைத்த கலவையையும் பாத்திரத்தில் ஊற்றவும்.
5 . தனியா தூள்,மிளகாய்தூள்,மஞ்சள்தூள் , தேவையான அளவு உப்பு போடவும்.தேவையான தண்ணீர் சேர்க்கவும்.
6. குழம்பு நன்றாக கொதித்து பாதியாக வறும்வரை காத்திருக்கவும்
7 . பின் மீனை போடவும்,மீன் போட்டதும் 5 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்.(மீனை அதிகம் கொதிக்க விட வேண்டாங்க..)
8 .ஒரு வடச்சட்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு போடவும்,கடுகு வெடித்ததும் வெந்தயம் , கருவேப்பிலை,சின்ன வெங்காயம்,பூண்டுமிளகாய்வத்தல் தாளித்து குழம்பில் ஊற்றவும்.
செய்ய தேவையான நேரம் 30 நிமிடம்
கொடம்புளி#
1.கொடும்புளி இந்தியாவில் கன்னியாகுமரியிலும்,கேரளாவிலும் அதிகம் பயன்படுத்துகிறார்கள்
2 .இதன் பூர்விகம் -இந்தியா
தமிழ்- கொடம்புளி
ஆங்கிலம்- brindel berry
3 . இதன் பழம் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.இதன்மேல் தோலுடன் உள்ள தசைப்பகுதிதான் மருத்துவ தன்மை வாய்ந்தது
4 . இதில் உள்ளத கைட்ராக்ஸி சிட்ரிக் அமிலம் என்ற வேதிப்பொருள்தான் உடலின்எடையைக் குறைக்கப் பெரும்வகையில் உதவுகிறது
5 .இதை உடலில்சேர்த்து வந்தால் சீரண மண்டலத்தை பலப்படுத்தும்
6 .உடலில் உள்ள கொழுப்பை கரைக்கும்,மலச்சிக்கல் தீரும்.

சமையல் குறிப்பு :

Follow us on Social Media