மத்தி மீன் வெள்ளை கத்திரிக்காய் குழம்பு – ராதிகா ஆனந்தன்

வெள்ளை கத்திரிக்காய்க்கு பதில் முருங்கைக்காய் / சாதாரண கத்திரிக்காய் / பஜ்ஜி மிளகாய் / வெண்டைக்காய்
சேர்த்து செய்யலாம்.. காய்கறி இல்லாமலும் மீனை மட்டும் வைத்து குழம்பு செய்யலாம்.

கத்திரிக்காயை சுத்தம் செய்து இரண்டு முனையையும் வெட்டி நீளவாக்கில் ஒரு கீறல் போடுங்கள்.

ஒரு பெரிய கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து, வெந்தயம் சிறிது, சீரகம் சிறிது சேர்த்து 2 நறுக்கிய பூண்டு , பச்சை மிளகாய் 1, 15 சின்ன வெங்காயம் நறுக்கியது அல்லது முழுதாக போட்டு நன்கு சிவக்க வறுக்கவும்.. இப்போ மிளகாய்தூள் 3 ஸ்பூன், மல்லித்தூள் 5 ஸ்பூன் சேர்த்து எண்ணெய்யிலேயே வதக்கி தண்ணீர் தெளித்து 3 பெரிய தக்காளி, 2 பூண்டு, அரை ஸ்பூன் சோம்பு, 3 சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்.. நன்கு வதக்கி கறிவேப்பிலை பிச்சுப் போட்டு குழம்புக்கு தேவையான உப்பு , தண்ணீர் சேர்த்து நல்லா கொதிக்க விடவும்.

எண்ணெய் பிரிந்து வரும் நேரம் 100கி
கத்திரிக்காய் போட்டு 3 நிமிடம் வேகவைத்து பின் 300கி
மீனை போட்டு மூடி போட்டு 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து மீன் வெந்து மசாலா சேர்ந்ததும் இரக்கும் முன் தேங்காய் எண்ணெய் அல்லது நெய் ஒரு ஸ்பூன் சேர்த்து பரிமாறவும்.

வைட்டமின் D , செலினியம், ஒமேகா 3, பாஸ்பரஸ் நிரைந்துள்ள மீன் உணவு ஆகும்

சமையல் குறிப்பு:

Follow us on Social Media