மாசி சம்பல் – Rtn கண்ணன் அழகிரிசாமி

தேவையான பொருட்கள் ;

மாசி கருவாடு : 1 துண்டு (50 கிராம்)
மிளகாய் வற்றல் : 4
உப்பு : தேவைக்கு
வெங்காயம் : 2
தக்காளி : 2
பச்சை மிள்காய் : 4
தேங்காய் துருவல் : அரை மூடி
கொத்தமல்லி கருவேப்பிலை : சிறிது
எலுமிச்சை : 1
தேங்காய் எண்ணெய் : 4 தேக்கரண்டி
கடுகு : தாளிக்க

செய்முறை :

நன்கு காய்ந்த மாசியை உடைத்து, மிளகாய் வற்றல் உப்பு சேர்த்து மிக்ஸியில் தூள் செய்து கொள்ளவும்.

வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, கொத்தமல்லி, கருவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, கொத்தமல்லி, கருவேப்பிலை ஆகியவற்றை முக்கால் பக்குவமாக வதக்கவும். ( மசிய விடக் கூடாது)

பிறகு மாசி கலவையை போட்டு கிளறவும். அத்துடன் தேங்காயை துருவல் போட்டு , குறைந்த தீயில் 2 நிமிடம் வைக்கவும். உப்பு சரிபார்த்து சரியாக சேர்க்கவும்.

அடுப்பை அணைத்து எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி பரிமாறவும்.

மாசி சம்பல் தயார்.

 

சமையல் குறிப்பு :

https://www.facebook.com/1305556053

Follow us on Social Media