மிண்ட் சிக்கன் ஃப்ரை – பிருந்தா ஆனந்த்

தேவையான பொருட்கள் ::

கோழி – 1/2 கி
நல்லெண்ணெய் – தே. அளவு
புதினா – 2 கைப்பிடி
கொத்தமல்லி இலை – 1 கைப்பிடி
பச்சை மிளகாய் – 4
பூண்டு – 6 பல்
இஞ்சி – 2 இன்ச் அளவு
தயிர் – 200 மி
சீரகம் – 1 ஸ்பூன்
கரம்மசாலா – 1 ஸ்பூன்
உப்பு – தே. அளவு

# செய்முறை ::

* புதினா, கொத்தமல்லி இலை, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்,
* நல்லெண்ணெயில் சீரகம் தாளித்து கோழியை தண்ணீர் இல்லாமல் எண்ணெயில் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்,
* பிறகு அரைத்த விழுதை சேர்க்கவும்
சிறிது நேரம் வதக்கவும்.
*தயிர், கரம்மசாலா, உப்பு சேர்த்து வதக்கவும்,
*அடுப்பை குறைத்து வைத்து வதக்கவும்,
*தயிரில் உள்ள நீரே போதுமானது, நீர் சேர்க்க தேவையில்லை.
*கோழி கிரேவி நன்றாக சுருண்டு வரும் வரை வதக்கி விடவும்,
*இப்போது மிண்ட் சிக்கன் ஃப்ரை தயார்.

{குறிப்பு : சிக்கனுக்கு பதில் பன்னீரும், காளானும் சேர்த்து இதே முறையில் செய்யலாம்}

சமையல் குறிப்பு :

Follow us on Social Media