மினி மிளகு முட்டை தோசை – ஜலீலாகமால்

தேவையான பொருட்கள்

முட்டை – 4
பொடித்த மிளகு – 1 tps
உப்பு – 1 tspn
நெய் அல்லது பட்டர் 5 tspn

செய்முறை
முட்டையை நன்கு அடித்து கொள்ளுங்கள் அதில் உப்பு தட்டிய மிளகு தூள் சேர்த்து கலக்கி வைக்கவும்
தோசை தவ்வாவை சூடு படுத்தி பட்டர் அல்லது நெய் விட்டு குட்டி குட்டி முட்டைகளாக சுட்டு எடுக்கவும்.

தீயின் தனலை குறைவாக வையுங்கள்
அதிக தீயில் செய்தால் கரிந்து விடும்
ஒரு பக்கம் வேக ஒரு நிமிடம் போதும்
ரொம்ப நேரம் வேக விட்டால் ரப்பர் போல ஆகிடும்

இதில் சாலட் வகைகள் அல்லது கிரேவி வைத்தும் சாப்பிடலாம்.

கட்டியான கிரேவி சம்பல் இருந்த்தால் சாண்ட்விச் போலவும் முட்டைக்குள் வைத்து ரோல் செய்து சாப்பிடலாம்.
குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுக்கலாம்.

#பேச்சுலர்களுக்கு ஒரு இண்டக்‌ஷன் அடுப்பு இருந்தால் தினம் காலை உணவுக்கு சுலபமாக சமைத்த்க்கொள்ளலாம்.

கவனிக்க: இது சிறு வயதில் நான் சமைக்க ஆரம்பித்த போது செய்த முதல் சமையல்

சமையல் குறிப்பு:

Follow us on Social Media