மிர்ச்சி கத்தரி சட்னி – Rtn கண்ணன் அழகிரிசாமி

தேவையான பொருட்கள்:

கத்தரிக்காய் : 200 கிராம்
தயிர் : 2 கப்
வெங்காயம் : 3
கடுகு : அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை : சிறிது
மல்லி இலை : 2 தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் : 4 தேக்கரண்டி
இந்துப்பு : தேவைக்கேற்ப
துருவிய தேங்காய் : 1 கப் (அரைத்துக் கொள்ளவும் )
பச்சை மிளகாய் : 3 (அரைத்துக் கொள்ளவும் )
இஞ்சி விழுது : ஒரு தேக்கரண்டி

செய்முறை:

ஒரு கடாயில் 2 தேக்கரண்டி எண்ணைய் ஊற்றி கத்தரிக்காய் போட்டு வதக்கி எண்ணெயிலேயே வேக வைக்கவும்.

பின் வெளியே எடுத்து மசித்து கொள்ளவும். அதே எண்ணெயில் நறுக்கிய வெங்காயத்தை வதக்கிக் கொள்ளவும்.

இப்பொழுது தயிர், வதக்கிய வெங்காயம் , அரைத்த தேங்காய் விழுது, மிளகாய் விழுது, இஞ்சி விழுது தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

இரண்டு தேக்கரண்டி எண்ணெயை கடாயில் சூடு செய்து கறிவேப்பிலை, கடுகு போட்டு பொரிந்தவுடன் எண்ணெயில் மசித்த கத்தரிக்காய் கலவையை ஊற்றவும்.

மிதமான தீயில் வைத்து லேசான நுரை போல் கொதி வந்தவுடன் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.

சுவையான மிர்ச்சி கத்தரி சட்னி தயார் !

முட்டை ஆம்லெட்டுடன் சாப்பிட சுவை அல்லும் …

சமையல் குறிப்பு :

Follow us on Social Media