மீன்முட்டை வெண்டைக்காய் தொக்கு – ராதிகா ஆனந்தன்

வெண்டைக்காய் நாலு பிஞ்சாக எடுத்து சுத்தம் செய்து நீளவாக்கில் கீறி உப்பு சீரகத்தூள் மிளகுத்தூள் தடவி 10 நிமிடம் வைத்திருந்து
தோசைக்கல்லில் பொன்னிறமாக வதக்கி கொள்ளவும்.

மீன்முட்டை 200 கி, கழுவி உப்பு மஞ்சள்தூள் எழுமிச்சைச்சாறு சேர்த்து பிசைந்து வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு விட்டு தாளித்து சீரகம் போட்டு, 1 பச்சை மிளகாய் கீறியது, கைப்பிடி நிறைய நறுக்கிய சின்ன வெங்காயம் , 4 பூண்டு போட்டு பொன்னிறமா வதக்கிக்கவும்.. நல்லா பொரிஞ்சதும் இஞ்சி பூண்டு மிளகு சோம்பு சிறிது சிறிது சேர்த்து அரைத்த விழுது போட்டு வதக்கி மிளகாய்த்தூள் காரத்துக்கேற்ப, மல்லித்தூள் அரை ஸ்பூன் போட்டு வதக்கி தக்காளி 2 அரைத்த விழுது சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து எண்ணெய் பிரிந்து வரும்போது மீன்முட்டை போட்டு மூடி போட்டு மிதமான தீயில்
வேகவிடவும்.

10 நிமிடம் ஆனதும் முட்டை சின்ன சின்னதா பிரிந்து மசாலாக்களுடன் கலந்து வெந்திருக்கும்.. இப்போ வதக்கிய வெண்டைக்காய் போட்டு 2 நிமிடம் மசாலா ஒட்டும் வரை கிளறிக் கொண்டு கடைசியில் நிறைய கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

ஒமேகா 3 , ஃபோலிக் ஆசிட் அடங்கியுள்ள அற்புதமான உணவு.. கருவில் இருக்கும் குழந்தையின் மூளை, நரம்பு வளர்ச்சிக்கும் சிறந்தது..

சமையல் குறிப்பு:

Follow us on Social Media