மீன் எஃக்ரு – மன்சூர் ஹாலாஜ்

C.C மீன் -1கி ( கண்ணாடி கட்லா )

சி.வெங்காயம் _ஒரு ( பெரிய ) பிடி
தக்காலி _1 பெரிசா
சீரகம் _3 தே.க
வ.மிளகாய் _10 ;15
உப்பு
தே.எண்ணை
மஞ்சள் தூள் 1/2 தே. க

**செய்முறை **

மிக்ஸில மிளகாய்,( அவரவர் காரத்து க்கு தேவையானது ) சீரகம்,மஞ்சள் தூள்,கல்லுப்பு போட்டு சிறிது நீர் விட்டு நல்லா அரைச்சுக்கணும், முடிஞ்சா அம்மில நல்லா மையா அரைச்சுக்கலாம்.

இந்த விழு்த கழுவி வச்சிருக்கிர மீன்ல பிசிரி வைக்கணும்.

வெங்காயத்த நல்லா நச் நச்னு தட்டி க்கணும்.(கண்டிப்பா மிக்ஸில வலு வலுனு அரைக்க கூடாது, அம்மி பெஸ்ட் )

அகலமான பாத்திரதில தே.எண்ணை கொஞ்சம் தாராளமா விட்டு வெங்காயத்த நல்லா தீயாம
வதக்க ணும், அடுத்து பொடியா கட் பண்ண தக்காளிய போட்டு சுருள வத க்கணும்.

(இந்த டிஷ் சுவையே பக்குவமா வதக்கிரதுலதான் இருக்கு.)

அதுல பிசிரிண மீன பொறுமையா பரவலா அடுக்கி வச்சு பாத்திரத்த கழுவிண தண்ணி சிறிது ஊ த்தி மூடி போட்டு மீடியமா அடுப்ப வேக விடணும், பொறுமையா திருப்பி விட்டு நல்லா தொக்கு பத த்துக்கு சுண்டி எண்ணை பிரிந்து வரனும்.

டிஷ் ரெ்டி.

பின் குறிப்பு **

இதுல காரம் எகிரும், அதனாலதான் இதுக்கு எஃக்ரு னு பேர் வந்ததுனு
நாங்களே நெனச்சுப்போம். ஏன்னா இது ஏங்கம்மா வோட மாமாவின் ரெஸிபீ. அவர் 35, 40 வருஷம் முன்னாடி மிலிட்டரில இருந்தாராம்,நல்லா ருசியா சமைப்பாராம்.( அவர் ரோட்டி சுட்டாரா இல்ல எதிரிய சுட்டாரானு சத்தியமா எனக்கு தெரியல ) ஆக இது ஒரு பழைய ரெஸிபீ.இதுதான் இந்த டிஷ் வரலாறு.எங்களுக்கு சொல்லப்பட்ட து.

சமையல் குறிப்பு:

Follow us on Social Media