மீன் கொத்தமல்லி – Rtn கண்ணன் அழகிரிசாமி

தேவையானவை :

வஞ்சரம் or கொடுவா or பாறை மீன் : 500 கிராம்
சின்னவெங்காயம் : 12
தக்காளி : 3
பச்சை மிளகாய் : 7
இஞ்சி, பூண்டு விழுது : 2 தேக்கரண்டி
தேங்காய் பால் : 1கப்
கடுகு : அரை தேக்கரண்டி
மிளகு : 1 தேக்கரண்டி
சீரகம் : 1 தேக்கரண்டி
வெந்தயம் : அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் : அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் : ஒரு தேக்கரண்டி
மல்லித்தூள் : ஒரு தேக்கரண்டி
கருவேப்பிலை : சிறிதளவு
கொத்தமல்லி : 1கட்டு,
உப்பு : தேவைக்கு
தேங்காய் எண்ணெய் : 3 தேக்கரண்டி

செய்முறை :

6 பச்சைமிளகாய், கொத்தமல்லி, மிளகு, சீரகம், சேர்த்து விழுதாக அரைத்து வைக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை , கடுகு, வெந்தயம், சீரகம், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, 1 பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கி ,

மஞ்சள் தூள் & தக்காளி சேர்த்து நன்றாக வதக்கி அரைத்து வைத்துள்ள கொத்தமல்லி மசாலா கலந்து ஒரு கொதி விடவும்.

அதனுடன் மீனை போட்டு மிதமாக கிளறி, மிளகாய் தூள், மல்லிதூள், சேர்த்து கலந்து கிளறவும்.

ஒரு கொதிவிட்டு தேங்காய் பால் சேர்த்து , தேவையான அளவு உப்பு சேர்த்து மீனை வேகவிட்டு இறக்கவும்.

சுவையான மீன் கொத்தமல்லி தயார் !

சமையல் குறிப்பு :

Follow us on Social Media