மீன் தலை கறி – சிவ ஜோதி

மீன்

தேவையான பொருட்கள்:

மீன் தலை 1

வெண்டைக்காய் – 10

தேங்காய் எண்ணை – 2 மே. க

கடுகு

சீரகம்

வெந்தயம் -1 தே.க

மிளகாய் தூள் – 1 1/2 தே.க

கொத்தமல்லி தூள் – 2 தே.க

மஞ்சள் தூள் – 1/2 தே

சின்ன வெங்காயம் – 5 அரிந்தது

பூண்டு – 10 பல் அரிந்தது

தக்காளி – 3

புளி தண்ணீர் – 1/2 கப்

வெந்தய இலை காய்ந்தது 1 தே.க.

உப்பு

கறிவேப்பிலை

செய்முறை:

வாணலியில் எண்ணெயை ஊற்றிக் காய்ந்தவுடன் கடுகு, வெந்தயம், சீரகம் போட்டு தாளித்து விடவும்.

அதிலேயே பூண்டு , வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.

பிறகு தக்காளியை போட்டு குழையும் வரை வதக்கவும்.

பிறகு வெண்டைக்காயை சேர்க்கவும்.

புளிக் கரைசலை ஊற்றவும்.

சொல்லப் பட்ட பொடிகளை ஒரு கிண்ணத்தில் கரைத்து, அதில் ஊற்றவும். உப்பு சேர்க்கவும்.

சிறிது நேரம் நன்கு கொதித்தவுடன்
மீன் தலையை போட்டு மூடி வைத்து வேகவிடவும்.
7-8 நிமிடங்கள் கழித்து மூடியைத் திறந்து 1 தே.க. தேங்காய் எண்ணெய் விட்டு, வெந்தய இலையை சேர்த்து மிக குறைவான தீயில் நன்றாக 10 நிமிடங்கள் வைத்து இறக்கவும். கறிவேப்பிலையை தூவி மூடி வைக்கவும்.

 

சமையல் குறிப்பு :

https://www.facebook.com/100000780602602

Follow us on Social Media