மீன் தலை கிளியர் சூப் – திருப்பூர் கணேஷ்

தேவையான பொருட்கள்:

1. மீன் தலை – 3 அ 4 (சுத்தம் செய்து கழுவி வைக்கவும்)
2. தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்
3. சின்ன வெங்காயம் – 5 (சிறிதாக வெட்டி தட்டி வைக்கவும்)
4. வரமிளகாய் – 2 சிறியது (ரெண்டாக உடைத்து வைக்கவும்)
5. மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன்
6. உப்பு & மிளகுத்தூள் – தேவையான அளவு.

அம்மியில் இடிக்க:
7. மிளகு – 15
8. சீரகம் – 1 ஸ்பூன்
9. சோம்பு – 1 ஸ்பூன்
10. வரமல்லி – 1 ஸ்பூன்
11. இஞ்சி – 2 cm
12. பூண்டு – 4 பல்
13. கறிவேப்பிலை – 1 கொத்து
14. கொத்தமல்லி தழை – 4 தண்டு

7 முதல் 14 வரை உள்ள அனைத்தயும் ஒன்றாக சேர்த்து நன்றாக இடித்து வைத்துக்கொள்ளவும்.

செய்முறை:

வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு வெங்காயம், வரமிளகாய் சேர்த்து வதங்கியபின் அம்மியில் இடித்து வைத்ததை போட்டு மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கி 2 அல்லது 3 டம்ளர் தண்ணீர் (தேவையான அளவு, 1-டம்ளர்-240ml)
ஊற்றி மூடி போட்டு நன்றாக கொதிக்க விடவும். சிறிது நேரம் கழித்து மீன் தலையை போட்டு அடுப்பை சிம்மில் வைத்து 15 நிமிடம் விட்டு பின் இறக்கி வைக்கவும்.

10நிமிடம் கழித்து ஒரு பவுலில் தேவையான அளவு சூப் எடுத்து அதில் கொத்தமல்லி தழை, உப்பு & மிளகுத்தூள் (salt&pepper) தூவி கம கம மீன் தலை கிளியர் சூப்பை பருகவும்.

சும்மா இல்லைங்க செமையாக இருந்துச்சு மீன் வாசமே தெரியல….
சூப் செஞ்சு குடுச்சுபாத்துட்டு சொல்லுங்க எப்படி இருந்துச்சுன்னு…….

வாழ்க கொழுப்புடன்! வாழ்க வளமுடன்!

சமையல் குறிப்பு :

Follow us on Social Media