மீன் தலை தொக்கு- ராதிகா ஆனந்தன்

250கி மீன் தலையை சுத்தம் செய்து உப்பு மஞ்சள் தூள் போட்டு பிரட்டி வைக்கவும்.

தனியாக மிளகு சோம்பு மல்லிவிதை சீரகம் கடுகு பட்டை(தலா அரை ஸ்பூன்) இஞ்சி பூண்டு , பெரிய தக்காளி 1, 3 சின்னவெங்காயம், சேர்த்து வதக்கி விழுதாக அரைத்து கொள்ளவும்.

ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து வெந்தயம் சீரகம் சேர்த்து வதக்கி ஒன்றரை கைப்பிடி பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், இரண்டு கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.. பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

வதங்கியதும் ஒரு மேஜைக்கரண்டி மிளகாய் தூள் போட்டு வதக்கி அரைத்த விழுது சேர்த்து தண்ணீர் கொஞ்சம் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.. எண்ணெய் பிரிந்துவரும் சமயம் உப்புப் போட்டு பிரட்டிய மீன்தலையை போட்டு மூடிப்போட்டு 10 நிமிடம் வேகவைத்து சுருண்டு வந்ததும் கொத்தமல்லி கறிவேப்பிலை தூவி பரிமாறவும்.

சமையல் குறிப்பு:

https://www.facebook.com/100001736941825

Follow us on Social Media