மீன் மிளகு வருவல் – Rtn கண்ணன் அழகிரிசாமி

கட்லா மீன் : அரை கிலோ
எலுமிச்சை சாறு : 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் : 1 தேக்கரண்டி
மிளகு : 3 தேக்கரண்டி (பொடியாக்கவும்)
சோம்பு : 2 தேக்கரண்டி (பொடியாக்கவும்)
இஞ்சி பூண்டு விழுது : 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் : 2
உப்பு : தேவையான அளவு
நெய் : தேவையான அளவு
கறிவேப்பிலை : சிறிது

செய்முறை :

மீனை சுத்தம் செய்து நன்றாக தண்ணீர் இல்லாமல் துடைத்து, உப்பு, எலுமிச்சை சாறு & மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி , அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

ஒரு அகன்ற தவாயில் நெய் ஊற்றி பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் & இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.

அத்துடன் ஊறிய மீன்களை சேர்த்து நன்றாக கலந்து, தவாவில் தனித்தனியாக இருக்குமாறு பரப்பி மூடி போட்டு 2 நிமிடம் வேக விடவும்.

பின் முடியை திறந்து 1 நிமிடம் விட்டு மீன்களை திருப்பி விட்டு மேலும் 2 நிமிடம் வைக்கவும்.

பின் பொடியாக்கிய மிளகு & சோம்பு ஆகியவற்றை இரு புறமும் தூவி மேலும் 2 நிமிடம் மிதமான தீயில் வைக்கவும். தேவைப்பட்டால் மேலும் நெய் சேர்க்கவும்.

கறிவேப்பிலை பொறித்து தூவி இறக்கவும்.

சுவையான மீன் மிளகு வருவல் தயார் !

சமையல் குறிப்பு :

Follow us on Social Media