மீன் மிளகு வறுவல் – தேன்மொழி அழகேசன்

தேவையான பொருட்கள்
மீன் 5 துண்டு
(எனக்கு இன்று விறால் மீன்தான் கிடைத்தது_ butter fish)
இஞ்சி பூண்டு விழுது1 மேக
சீரகம்1/2 தேக
மிளகு1 தேக
எலுமிச்சை பழச்சாறு 1 தேக
பச்சமிளகாய்2
தாளிக்க கடுகு தேங்காய் எண்ணெய் கறிவேப்பிலை
உப்பு தேவையான அளவு
செய்முறை#
வடச்சட்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும் அரைத்த மிளகு சீரகம் பச்சமிளகாய் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து சிறிது நீர் சேர்த்து நன்கு வதக்கவும்.மீனை போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி வைக்கவும் .மிதமான சூட்டில் வைத்து வேக விடவும் .மீன் சிறிதுநேரத்திலேயே வெந்து விடும்.2,3 தடவை மீனை திருப்பி போடவும்.எண்ணெய் பிரிந்துவரும் வரை வதக்கவும். இறக்கிவைத்து எலுமிச்சை சாறு கலந்து சாப்பிடவும்..
செய்ய தேவையான நேரம் 15 நிமிடம்..

சமையல் குறிப்பு :

Follow us on Social Media