முடக்கத்தான் கீரை சூப் – கார்த்திகா சுரேஷ்குமார்

தேவையான பொருட்கள்:
1)முடக்கத்தான் கீரை 1 கட்டு
2) இஞ்சி சிறிது
3) பூண்டு 5/6 பற்கள்
4) எலுமிச்சை 1/2
5) சின்ன வெங்காயம் – 5
6) மிளகு சிறிது
7) சீரகம் சிறிது
8) கருவேப்பிலை
9) இந்துப்பு சிறிது
10) வெண்ணெய் – 2 தேக்கரண்டி

செய்முறை:
1) வடசட்டியில் வெண்ணெய் விட்டு மிளகு, சீரகம், கருவேப்பிலை தாளிக்கவும்.
2) அதில் சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்
3) பின் முடக்கத்தான் கீரையையும் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்
4) இந்துப்பு, எலுமிச்சை சாறு கலந்து, அனைத்தையும் மிக்சியில் அரைத்து வடிகட்டி , தேவையான வெந்நீர் கலந்து 3 பேர் பருகலாம்.

முடக்குவாதம், நரம்பு தளர்ச்சி போன்றவற்றிக்கு மருந்தாக சொல்லப்படுவது இந்த முடக்கத்தான் கீரை!!

சிறிது கசப்பான சூப் ஆனால் மிகவும் சத்தானது!!

 சமையல் குறிப்பு: 

https://www.facebook.com/100004193890234

Follow us on Social Media