முட்டை கீரை பொரியல் – அருள் சிவம்

தேவையான பொருட்கள்:

தண்டுக்கீரை 1/2கட்டு (சுக்குட்டிக்கீரை,செங்கீரை போன்றவற்றிலும் சமைக்கலாம்).
முட்டை….4
சின்னவெங்காயம்…..10
வறமிளகாய்….2
பூண்டு……3 பல்
மிளகு….1ஸ்பூன்
மஞ்சள்பொடி…1 ஸ்பூன்
தேங்காய் எண்ணைய்…2 ஸ்பூன்

செய்முறை:

கீரையை சுத்தம் செய்து, பொடியாக நறுக்கி நன்கு அலாசி வைக்கவும்.

சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.

மிளகாய்களை பொடியாக நறுக்கிவைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து சூடானவுடன் தேங்காய் எண்ணைய் ஊற்றி கடுகு போடவும்.
கடுகு பொரிந்தவுடன் வெங்காயம் மிளகாய் போட்டு நன்கு வதக்கவும்.

பின்னர் கீரையை சேர்த்து வதக்கவும்.
தண்ணீர் சேர்க்க தேவையில்லை.

அடுப்பை சிம்மில் வைத்து அடிபிடிக்காமல் கீரையை வதக்கவும்.

வதங்கியவுடன் முட்டைகளை உடைத்து ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.

நன்கு வெந்தவுடன் பொடியாக நறுக்கிய பூண்டு, பொடியாக்கிய மிளகு, மஞ்சள் பொடி சேர்த்து நன்கு கிளறி அடுப்பை நிறுத்தவும்.

சமையல் குறிப்பு:

https://www.facebook.com/100004574404212

Follow us on Social Media