முட்டை குழம்பு – தேன்மொழி அழகேசன்

தேவையான பொருட்கள்
நாட்டுக்கோழி முட்டை 4
சின்ன வெங்காயம் 8
இஞ்சி 1 இஞ்ச்
பூண்டு 10 பல்
சோம்பு 1/2 தேக
கசகசா 1/2 தேக
தக்காளி 1
தேங்காய் 2 சில்
பேலியோ மசாலா 2 மேக
பச்சமிளகாய் 1
கறிமசாலாதூள் 1/2 மேக
தாளிக்க சோம்பு கடுகு கறிவேப்பிலை தேங்காய் எண்ணெய்
செய் முறை#
முட்டையை சிறிது உப்பு சேர்த்து வேக வைத்து ஓடை உரித்து .1/2 இஞ்ச் அளவு இடைவெளி விட்டு முட்டையை கீறி வைத்து கொள்ளவும்.சின்ன வெங்காயம்,இஞ்சி,பூண்டு,சோம்பு கசகசா(தனியாக வறுக்கவும்) பாதி தக்காளி தேங்காய் எண்ணெய் ஊற்றி வணக்கவும்.ஆ ற வைத்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் அரைத்த கலவை,மசாலா,உப்பு தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.(கொதி வந்ததும் சிம்மில் வைக்கவும்)
கடைசியாக அரைத்த தேங்காய் விழுது அல்லது தேங்காய் பால் சேர்க்கவும்.கீறி வைத்துள்ள முட்டையை சேர்க்கவும்.வடச்சட்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு சோம்பு வெடித்ததும் கறிவேப்பிலை , பச்சமிளகாய்,4 நீள வாக்கில் அரிந்த வெங்காயம்,பாதி தக்காளி நன்றாக வணக்கி குழம்பில் ஊற்றவும்.
முறை2#
இதே குழம்பில் தேவையான முட்டையை உடைத்து ஊற்றி குறைந்த வெப்பத்தில் வைத்து மூடி வைக்கவும்.கிண்ட வேண்டாம்.5 நிமிடம் கழித்து எடுத்தால் அந்த குழம்பில் ஊறி சுவையான ருசியான முட்டை ரெடி
முறை3#
மட்டன் , சிக்கன் , குடல் குழம்பிலும் ஊற்றி செய்யலாங்க.
முறை4#
ஆம்லேட்ட கூட துண்டுகளாக்கி இது மாதிரி குழம்பு செய்யலாங்க.
செய்ய தேவையான நேரம் 30 நிமிடம்

சமையல் குறிப்பு :

Follow us on Social Media