முட்டை சட்னி – ராதிகா ஆனந்தன்

ஒரு சின்ன குக்கரில் தே.எண்ணெய் ஊற்றி, கடுகு , சீரகம் தாளித்து , 2 பச்சை மிளகாய் கீரியது, இஞ்சி பூண்டு விழுது கால் ஸ்பூன், பெரிய வெங்காயம் ஒன்று, 5 பெரிய தக்காளி நறுக்கியது, ஒன்றரை தேக்கரண்டி மிளகாய்தூள், அறை தேக்கரண்டி மல்லித்தூள், உப்பு அனைத்தும் அப்படியே குக்கரில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் 4 விசில் வைத்து இரக்கவும். நன்கு மசித்து தண்ணீர் வற்றும் வரை கொதிக்க வைத்து , கறிவேப்பிலை சேர்த்து, 4 முட்டை அடித்தது ஊற்றி கிளறவும். பொரியல் ஆகும் பக்குவம் வரை சமைக்க கூடாது.. முட்டை ஊற்றியதும் 3 நிமிடம் மிதமான தீயில் கிளறினால் போதும்.. பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, அறை ஸ்பூன் மிளகு தூள் ( தேவைப்பட்டால்) தூவி
பரிமாறவும்..

சமையல் குறிப்பு:

Follow us on Social Media