முட்டை சில்லி ஃப்ரை – Rtn கண்ணன் அழகிரிசாமி

தேவையானவை :

முட்டை : 4 (வேக வைத்துக் கொள்ளவும்)
வெங்காயம் : 1
தக்காளி : 1
பச்சை மிளகாய் : 2 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
இஞ்சி துருவல் : 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் : கால் தேக்கரண்டி
மிளகாய் தூள் : 1 தேக்கரண்டி
இந்துப்பு : தேவைக்கு
நெய் : 2 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை : சிறிதளவு

செய்முறை :

வேக வைத்த முட்டைகளை நீளவாக்கில் இரண்டாக நறுக்கி வைக்கவும்.

ஒரு தவாவில் நெய் ஊற்றி, சூடானதும், இஞ்சி & பச்சை மிளகாய் தாளித்து, பின் அதனுடன் நறுக்கிய வெங்காயம் & தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.

பின் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மஞ்சள் தூள், மிளகாய் தூள் & இந்துப்பு சேர்த்து கொதிக்க விடவும், சுண்டி வரும் போது, நறுக்கிய முட்டைகளை பரப்பி, மசாலா முட்டையின் மேல் வருமாறு போட்டு, மிதமான தீயில் 10 நிமிடம் வைக்கவும். பிரட்டக் கூடாது. நன்றாக ஃப்ரை ஆனவுடன் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.

சுவையான முட்டை சில்லி ஃப்ரை தயார் !

சமையல் குறிப்பு :

https://www.facebook.com/1305556053

Follow us on Social Media