முட்டை தக்காளி கிரேவி – பிருந்தா ஆனந்த்

#தேவையான பொருட்கள ::

தக்காளி – 5
வெங்காயம் – 3
சீரகம் – 1 ஸ்பூன்
பட்டை – 2
சோம்பு – 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
மிளகாய் தூள் – தே. அளவு
மல்லி தூள் – தே . அளவு
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
முட்டை
(வேக வைத்து) – 5
தேங்காய் எண்ணெய்/
நல்லெண்ணெய் – தே . அளவு
கடுகு – 1/2 ஸ்பூன்
உப்பு – தே . அளவு

#செய்முறை ::

*எண்ணெயில் கடுகு,பட்டை,சோம்பு,சீரகம்,காய்ந்த மிளகாய் தாளித்து வெங்காயம்,தக்காளி சேர்த்து வதக்கவும் .
*மிளகாய் தூள் ,மல்லி தூள் ,மஞ்சள் தூள், உப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
*நன்றாக கிரேவி பதத்திற்கு வந்தவுடன்
வேக வைத்த முட்டைகளை இரண்டாக வெட்டி கிரேவியில் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டால்,
*சுவையான முட்டை தக்காளி கிரேவி தயார்.

சமையல் குறிப்பு :

Follow us on Social Media