முட்டை தேங்காய் பால் கரி – டாலி பாலா

தேவை :

இரண்டு அவித்த முட்டை
இரண்டு பெரிய வெங்காயம்
இஞ்சி ஒரு துண்டு
பூண்டு நாலு பல்
பச்சை மிளகாய் 2
கசகசா ஒரு டீ ஸ்பூன்
பட்டை
துருவிய தேங்காய் நூறு கிராம்
தேங்காய் எண்ணை இரண்டு மேசை கரண்டி
ஜீரகம் ஒரு ஸ்பூன்
ஒரு வெங்காயம்.,இஞ்சி,பூண்டு,கஸகஸா பட்டை மிளகாய் இவற்றை நைசாக அரைக்கவும
இன்னொரு வெங்காயம் பொடியாக வெட்டிக் கொள்ளவும்
தேங்காய் அரைத்துப் பால் இரண்டு முறை எடுக்கவும்
ஒரு வாணலியில் எண்ணை விட்டு,சீரகம் தாளித்து வெட்டி வைத்த வெங்காயத்தை நன்றாக வதக்கி அதில் அரைத்த மசாலா கலவையை சேர்த்து நன்றாக பச்சை மணம் போகும் வரை வதக்கி அதில் இரண்டாம் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க வைத்து தேவையான உப்பு சேர்த்து அதில் வேக வைத்து உரித்த முட்டையை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து பின் அடுப்பை நிறுத்தி அதில் முதல் தேங்காய் பால் சேர்த்து கொத்தமல்லி இலை தூவி சாப்பிடவும்

சமையல் குறிப்பு:

https://www.facebook.com/1599232022

Follow us on Social Media