முட்டை பட்டர் மசாலா – ஹேமலதா

Egg butter masala :

தேவையான பொருட்கள்: முட்டை 5 , வெங்காயம் 1 , தக்காளி 1 , சோம்பு, முந்திரி 10 , பிரெஷ் கிரீம் , இஞ்சி பூண்டு பேஸ்ட், கரம் மசாலா, மிளகாய் தூள் 2 sp , காஸ்மீரி மிளகாய்தூள் 1sp ,மல்லித்தூள் 4sp , சீரகதூள் 1sp , மஞ்சள்தூள், பட்டர் 3sp, கஸ்தூரி மேத்தி

செய்முறை: வாணலியில் பட்டர் 2sp , ஊற்றி சோம்பு தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும். தக்காளி அரைத்து சேர்க்கவும் … முந்திரியை 10 நிமிடம் ஊறவைக்கவும் … இஞ்சிபூண்டு பேஸ்ட், கரம்மசாலா தூள், அனைத்து பொடிகளையும் போட்டு வதக்கி நீர் ஊற்றி கொதிக்க விடவும் .. முந்திரியை அரைத்து கொள்ளவும்,.. முட்டையை வேகவைத்து எடுத்து கொண்டு fork வைத்து குத்தி கொள்ளவும்.. முட்டை சேர்த்து கொதிக்க விடவும்.. முந்திரி பேஸ்ட் , கிரீம் சேர்த்து மசாலா சுருண்டு வரும்போது கஸ்தூரி மேத்தி மல்லி இலை தூவி பட்டர் 1sp சேர்த்து இறக்கவும்…

சமையல் குறிப்பு :

https://www.facebook.com/100002519808481

Follow us on Social Media