முட்டை பன்னீர் கறி – தேன்மொழி அழகேசன்

தேவையான பொருட்கள்
முட்டை 4
பன்னீர் 150 கிராம்
சின்ன வெங்காயம் 10
தக்காளி 1
தேங்காய் 2 சில்
இஞ்சி 2 இஞ்ச்
பூண்டு 10 பல்
பேலியோ மசாலா 1 மேக
காஷ்மீர் மிளகாய் தூள் 1 மேக
உப்பு தேவையான அளவு
கறிவேப்பிலை கொத்தமல்லி சிறிதளவு
தாளிக்க சோம்பு கடுகு நெய்
செய்முறை#
வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு தேங்காய் 4 யும் மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.அரைத்த கலவையை பாத்திரத்தில் ஊற்றவும்.மசாலாவை போடவும்.தேவையான உப்பு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.முட்டையை உப்பு போட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.முட்டையை கீறி வைத்து கொள்ளவும்( மசாலா உள்ளே இறங்கும்).பச்சை வாசம் போகும் வரை கொதிக்க வைக்கவும்.வேகவைத்த முட்டையை உள்ளே போடவும்.அடுத்து அரிந்த பன்னீரை போடவும்.குறைந்த வெப்பத்தில் வைத்து மூடி போட்டு கொதிக்க வைக்கவும்.கடைசியாக வடச்சட்டியில் நெய் ஊற்றி கடுகு சோம்பு வெடித்ததும் கறிவேப்பிலை அரிந்த 2வெங்காயம் அரிந்த 2 பூண்டு 1 வர மிளகாய் போட்டு தாளித்து ஊற்றவும்.
கலோரிஸ் கணக்கிட்டு எடுங்க.
செய்ய தேவையான நேரம் 35 நிமிடம்

சமையல் குறிப்பு :

Follow us on Social Media