முட்டை பன்னீர் புர்ஜி – யசோ குணா

பொடியாக அறிந்த வெங்காயம் , தக்காளி , குடைமிளகாய் , சீஸ் , கறிவேப்பிலை , இவற்றை தேங்காய் எண்ணெயில் வதக்கி கொள்ளவும்..

100 கிராம் சதுர வடிவில் வெட்டி வைத்துள்ள பன்னீரை சேர்த்து பிரட்டி மூடிவைக்கவும்.

வதங்கிய கலவையில் மஞ்சள் தூள் , சீரகத்தூள் , மிளகு தூள் , மிளகாய் தூள் , உப்பு தேவைக்கு சேர்த்து மூடி வைக்கவும் .

4 முட்டைகளை உடைத்து நன்றாக அடித்து கலக்கி கலவையுடன் சேர்த்து Brown colour வரும் வரை அதிகம் உடைந்து விடாமல் பிரட்டவும் .. இறக்கி கொத்துமல்லி இழை தூவி வயிறாற உண்ணலாம்.

Savadan Balasundaran Ji , மாதிரி புதிதாய் கிச்சன் களம் புகுவோருக்கு , வீட்டில் சமையல் திலகம் அவார்டு கிடைக்கும்..

அதிக பட்சம் 10 நிமிடங்களில் ஒரு வேளை உணவு தயார்.

Follow us on Social Media