முட்டை பீட்சா – ரைஹானா

தேவையான பொருட்கள்:

முட்டை – 4
வெங்காயம் – 2 ( பெரியது)
ப.மிளகாய் – 2
தங்காளி – 2
மல்லி தழை – தேவைக்கு
கரம் மசாலா – 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன்
பூண்டு – 4 பல்
சோம்பு சீரக மிளகு தூள் – 1 1/2 ஸ்பூன்
மிளகு சீரகதூள்_1 ஸ்பூன்
உப்பு_தேவைக்கு
பட்டர் அல்லது நெய் – 2 ஸ்பூன்


செய்முறை.

1 வெங்காயம் தக்காளி ப.மிளகாய் ,, ஆகியவற்றை பொடியாக நறுக்கி ,,, பூண்டை தட்டி கொள்ளவும்

2 ஒரு முட்டையை நன்கு உப்பு போட்டுகலக்கி கொள்ளவும்

3 அடுப்பில் ஆப்ப கடாயை வைத்து நெய் ஊற்றி சூடானதும் பூண்டை போடவும் அதன் பிறகு வெங்காயம் தக்காளி, ப மிளகாய் போட்டு நன்கு வதக்கி, கரம் மசலா , மிளகாய் பெடி , மசலா பொடி உப்பு போட்டு நன்கு வதக்கி தனியே எடுத்து வைக்கவும்

ஆப்ப கடாயில் கலக்கிய ஒரு முட்டையை பரவலாக உற்றவும் அதன் மேல் வதக்கிய வெங்காயம் தக்காளி மசாலை பரப்பவும் அதன் மேல் மீதி உள்ள மூன்று முட்டையை உடைத்து ஊற்றவும் அதன் மேல் மிளகு சீரகதூள் தூவி,,,, மல்லி இழை தூவி, அடுப்பை சிம்மில் வைத்து மூடி போட்டு 10 நிமிடம்வேக விடவும் ,,,முட்டை பீட்சா தயார் ….. எடுத்து கட் செய்து சாப்பிடால் சுவை அள்ளும் செய்து சுவையுங்கள் உறவுகளே

” என்இனிய நண்பர் ஒருவர் இதை கற்று கொடுத்தார் இதை போடாவிட்டால் சாபம் விட்டுடுவார் ,,சொல்லி விட்டேன் நண்பரே,,,,,,,,,??

குறிப்பு : இதை கட்டாயம் நான் ஸ்டிக ஆப்ப கடாயில் செய்யவும் , இல்லையெனில் அடி பிடிக்க வாய்ப்புண்டு
அடுப்பை சிம்மில் வைத்து செய்ய வேண்டும் ….
சைட் டிஸ்ஸா க மின்ட் சட்னி அல்லது தக்காளி சட்னி வைத்துக் கொள்ளுங்கள்.

சமையல் குறிப்பு :

https://www.facebook.com/100011588928973

Follow us on Social Media