முட்டை புடலைங்காய் பொரியல் – Rtn கண்ணன் அழகிரிசாமி

தேவையானவை :

புடலைங்காய் : கால் கிலோ
முட்டை : 2
மிளகுத்தூள் : ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் : 2
உப்பு : தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் : 4 மேஜைக்கரண்டி
கடுகு : 1 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் : 1
கறிவேப்பிலை : சிறிது

செய்முறை :

அடுப்பில் கடாயை வைத்து ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் முட்டையை உடைத்து ஊற்றி கிளறி உதிரியாக வந்தவுடன் தனியே எடுத்து வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, மிளகாய், நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றை ஒவ்வொன்றாக போட்டு தாளிக்கவும். வெங்காயம் பாதி வதங்கியதும் நறுக்கிய புடலைங்காய், உப்பு சேர்த்து 15 நிமிடங்கள் வரை மிதமான சூட்டில் வைத்து நன்கு வதக்கவும்.

காய் வெந்ததும் பொரித்து வைத்த முட்டையையும் மிளகுத்தூளையும் போட்டு ஒரு நிமிடம் கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.

முட்டை புடலைங்காய் பொரியல் தயார் !

சமையல் குறிப்பு :

Follow us on Social Media