முட்டை புர்ஜி – ஆசியா உமர்

தே.பொ:-
முட்டை – 4
நறுக்கிய பெரிய வெங்காயம் – 2
நறுக்கிய தக்காளி – 1
நறுக்கிய பச்சை மிளகாய் – 1 அல்லது 2
பொடியாக நறுக்கிய அல்லது துருவிய இஞ்சி – 1 டீஸ்பூன் (விரும்பினால்)
நெய் – 2 டீஸ்பூன்
நறுக்கிய மல்லி இலை –சிறிது.
பொடித்த மிளகு, உப்பு சுவைக்கு.

செய்முறை:-
பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி,பச்சை மிளகாய், இஞ்சி, மல்லி இலை இவற்றுடன் முட்டை சேர்த்து கலந்து கொள்ளவும். அத்துடன் சுவைக்கு உப்பு, மிளகுத்தூள் சேர்த்து மீண்டும் கலந்து வைக்கவும்.
ஒரு கடாயில் நெய் விட்டு , கலந்து வைத்த முட்டை கலவையை பரத்தி விட்டு, அடுப்பை மீடியமாக வைத்து மூடி போடவும்.
ஒரிரு நிமிடத்தில் திறந்து பிரட்டி , பிரட்டி உதிர்த்து விடவும்.
ஒரு தட்டில் எடுத்து வைத்து மல்லி இலை அலங்கரித்துப் பரிமாறவும்.
ஈசி டேஸ்டி முட்டை புர்ஜி தயார்.

Follow us on Social Media