முட்டை மசாலா – தேன்மொழி அழகேசன்

தேவையான பொருட்கள்:
முட்டை 4
வெங்காயம் 1
கறிவேப்பிலை சிறிதளவு
தக்காளி 1
இஞ்சி பூண்டு விழுது 1 மேக
கறிமசாலா 1 மேக
மஞ்சள் தூள் 1/2 தேக
உப்பு தேவையான அளவு
தாளிக்க கடுகு சோம்பு நெய்
செய் முறை#
வடச்சட்டியில் நெய் ஊற்றி கடுகு சோம்பு வெடித்ததும் கறிவேப்பிலை அரிந்த வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு விழுது உப்பு போட்டு நன்றாக வதக்கியதும் மசாலாவை சேர்க்கவும்.எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கி கடைசியாக உடைத்த முட்டைகளை ஊற்றவும் .முட்டைக்கு தேவையான உப்பு சேர்த்து கொள்ளவும்.கமகம மசாலா முட்டை ரெடி
செய்ய தேவையான நேரம் 10 நிமிடம்
2 .பீர்க்கைங்காய் மசாலா#
தேவையான பொருட்கள்
பீர்க்கைங்காய் 2
(வட்டமாக அரிந்தது)
இஞ்சி பூண்டு விழுது 1 மேக
வெங்காயம் தக்காளி 1
உப்பு தேவையான அளவு
கறிவேப்பிலை சிறிதளவு
கறிமசாலா தூள் 1 மேக
பேலியோ மசாலா 1 மேக
செய் முறை
வடச்சட்டியில் நெய் ஊற்றி கடுகு சோம்பு வெடித்ததும் கறிவேப்பிலை அரிந்த வெங்காயம் தக்காளி வணக்கியதும் இஞ்சி பூண்டு விழுது உப்பு மசாலா சேர்க்கவும்.காயையும்சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.மிதமான வெப்பத்தில் வைத்து மூடி போட்டு வேக வைக்கவும்.காயில் உள்ள நீரே போதும்.தேவையென்றால் ஊற்றி கொள்ளவும்.
செய்ய தேவையான நேரம் 20 நிமிடம்
இரண்டும் மிக எளிதானது.சுவையும் அருமை.

சமையல் குறிப்பு :

Follow us on Social Media